பப்பாளிப்பழம் பயன்கள்-மருத்துவ குணநலன்கள்

PinterestLinkedInTumblr+

பப்பாளிப்பழம் பயன்கள்-மருத்துவ குணநலன்கள்

பப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால், செரிமானம் எளிதில் நடைபெற்று, மலச்சிக்கலும் குணமாகிறது.இது பழங்களின் ஏஞ்சல் அழைக்கப்படுகின்றது.ஏனென்றால் பப்பாளிப்பழம் நன்கு கனிந்த பின் பார்த்தால் அதன் நிறம் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும்.

பப்பாளி ஜூஸ்

 1. பப்பாளி ஜூஸில் ஊட்டச்சத்துக்கள்,வைட்டமின்கள், (vitamin) கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
 2. எனவே பப்பாளியை ஜூஸ் போட்டு குடித்தால் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
 3. குறிப்பாக கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
 4. பப்பாளி ஜூஸ் உடலின் ஆரோக்கியத்திற்கு உகந்தது.

பப்பாளி நன்மைகள்

 1. பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, ரிபோபாப்பைன் என்சைம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் இ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன.
 2. இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
 3. இதில் உள்ள புரோட்டீனான பாப்பைன் செரிமான மண்டலத்தை சரியாக இயக்குகிறது.
 4. மலச்சிக்கலுக்கு அருமையான மருந்து.
 5. புற்று நோயைக் குணப்படுத்தும் பக்குவம் பப்பாளிக்கு உண்டு.
 6. பப்பாளியில் இருக்கும் நார்ச்சத்து புற்றுநோயை உண்டாக்கும் டாக்ஸின்களை
 7. உடலிலிருந்து முற்றினும் வெளியேற்றி வயிற்றில் ஏற்படும் புற்று நோயை முற்றினும் தடுக்கின்றது.
 8. பொதுவாக நமது உடலில் கழிவுகள் வெளியேறாமல் இருந்தால், அதுவே
 9. முக்கால்வாசி நோய்களின் வரவிற்கு வழிவகுக்கும். அந்த வகையில் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு பப்பாளி ஒரு நல்லமருந்தாகும். வயிற்றுக்கடுப்பு, செரிமான மி ன் ைம, அமிலத்தொல்லை போன்றவற்றுக்கும் பப்பாளி சிறந்த நிவாரணம் தரும்.
 10. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
 11. செரிமான சக்தியை அதிகரிக்கும்.
 12. சீரற்ற , மாதவிலக்கு பிரச்சனை உள்ள பெண்களுக்கு இப்பழம் ஒரு அருமருந்து.
 13. பப்பாளியில் உள் ள பப்பாயின் என்சைம்களில் ஆர்ஜினைன் என்ற மூல்ப்பொருள் உள்ளது.
 14. அது ஆண்களுக்கு உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவும். மேலும்
 15. கார்பின் இருதயத்துக்கும் பைப்ரின் ரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றன.
 16. குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை அடிக்கடி கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும்.எலும்பு மற்றும் பல் வளர்ச்சியில் உறுதி ஏற்படும்.
 17. கல்லீரல் கோளாறுகளை பப்பாளி பழம் சரிசெய்ய வல்லது.
 18. தினமும் காலையில் பப்பாளிப்பழத்தை துண்டுகளாகவோ அல்லது ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றி தோல் பளபளக்கும்.
 19. பப்பாளிக்காயை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டு வந்தாலும், எடை குறையும்.
 20. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் வெந்நீரால் கழுவி முகச்சுருக்கம் மறைந்து முகம் அழகு பெறும்.
 21. பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதி துண்டுகளை முகப்பரு உள்ளவர்கள்
 22. தங்களது முகத்தில் மென்மையாக தேய்த்து வந்தால் பருக்களை போக்குவதோடு முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி பொலிவு கிடைக்கும்.
 23. பப்பாளிப் பழத்தை தேனில் நனைத்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

KEYWORDS & TAGS

பப்பாளி பழம் அழகு குறிப்புகள்,பப்பாளி பழம் சர்க்கரை நோய்,பப்பாளி பழம் கர்ப்பிணி பெண்கள்,பப்பாளி விதை பயன்கள்,பப்பாளி வைட்டமின்,பப்பாளி ஜூஸ் நன்மைகள்

Papaya Nutrition,Papaya Benefits,Papaya Seeds,Papaya Side Effects,Papaya Recipes,Papaya Calories,Papaya Benefits For Skin,Papaya Nutritional Value

Share.

About Author

Leave A Reply