தக்காளிப்பழம் பயன்கள்-மருத்துவ குணநலன்கள்
- தக்காளி என்பது ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் நினைக்கின்றனர். தக்காளியும் பழவகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
- பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் தரும்.
- தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டதட்ட டானிக் குடிப்பதற்கு நிகரானது.
- அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வ கை யில் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91மில்லி கிராம்
- உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது.
- தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.
- பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவம் சுத்தமாகவும்இருந்தாலே உடலில் நோய் தொற்று ஏற்படுவது மிகவும் குறைவு.
- தக்காளிப் பழத்தை எந்த விதத்தினாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது. தக்காளிப் பழத்தை சூப்பாக காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் மென்மையாகவும் ஒருவிதபொலிஷடனும் திகழும்.
- இதுமட்டுமல்லாமல் சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.
- தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை சப்பாத்தி, பூரி உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
- குழந்தைகளும் விரும்பி உண்பார்கள் அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும்.
- விலை உயர்ந்த பழங்களை உட்கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் தக்காளிப் பழத்தை சாப்பிடலாம் என்று சொல்லலாம். ஆனால் தற்போதைய விலைவாசியில் தக்காளிப்பழமும் விலை உயர்ந்த பழமாக மாறிவிட்டுள்ளது என்பதே உண்மையாக இருக்கிறது.
மருத்துவ குணங்கள்:
- புராஸ்டேட் கேன்சர் என்பது ஆண்களை அதிகளவில் தாக்கும் புற்றுநோய். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை இந்தப் புற்றுநோய் தாக்குவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- புராஸ்டேட் புற்றுநோய், ஆண் உறுப்புக்கு இணையாக சுரப்பித் திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியைத் தாக்குகிறது. இதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது.விளைவு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போலத் தோன்றும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படும் சிறுநீருடன் ரத்தம் கலந்துபோகும். இந்நிலையில், புராஸ்டேட் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருக்கிறது.
- தக்காளிக்கு, அதுவும் சமைத்த தக்காளிக்கு புராஸ்டேட் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. தக்காளியில் காணப்படும் லைக்கோபின் என்ற பொருள்தான் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுகிறது.
KEYWORDS & TAGS
தக்காளி அழகு குறிப்பு,தக்காளி சாறு பயன்கள்,வெங்காயம் பயன்கள்,தக்காளி ஜூஸ்,தக்காளி சட்னி,கேரட் பயன்கள்,தக்காளி வெங்காயம்
தக்காளி பழம்
Tomato Benefits For Skin,Benefits Of Eating Raw Tomatoes,Cucumber Benefits,Benefits Of Eating Tomato In Empty Stomach,Disadvantages Of Eating Tomatoes,Benefits Of Tomato Paste
Tomato Advantages And Disadvantages,Cooked Tomatoes Benefits
Benefits Of Eating Raw TomatoesBenefits Of Eating Tomato In Empty StomachBenefits Of Tomato Paste Tomato Advantages And DisadvantagesCooked Tomatoes BenefitsCucumber BenefitsDisadvantages Of Eating TomatoesTomato Benefits For Skinகேரட் பயன்கள்தக்காளி அழகு குறிப்புதக்காளி சட்னிதக்காளி சாறு பயன்கள்தக்காளி ஜூஸ்தக்காளி வெங்காயம் தக்காளி பழம்வெங்காயம் பயன்கள்